இதனால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்! வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
68

இதனால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்! வெளியான அதிர்ச்சி தகவல்!!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த கொரோனாவுக்கு எதிராக போராடக் கூடிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை உலக நாடுகள் அனைத்தும் மும்முரமாக செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது.

இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகெங்கும் வேகமாக பரவி வந்த நிலையில், பல நாடுகளில் குறைந்து வந்து கொண்டிருந்த கொரோனா தொற்றானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து புதிதாக பூஸ்டர் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒமைக்ரானின் புதிய உருமாற்றம் சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் காணப்பட்டது. ஒமைக்ரானின் இந்த புதிய உருமாற்றத்திற்கு பிஏ.2 என பெயரிடப்பட்டது. ஒமைக்ரானில் இதுவரை 53 உருமாற்ற வைரஸ்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அவற்றில், பிஏ.1, பிஏ.2, மற்றும் பிஏ.3 ஆகியவை முக்கியமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பிஏ.2 வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியதாக இருக்கிறது. இருப்பினும், இந்த வைரஸால் அதிக பாதிப்புகள் இருக்காது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இதனிடையே ஜப்பான் ஆய்வாளர்கள் இதை மறுத்துள்ளனர். இதுகுறித்து, டோக்கியோ ஆய்வாளர்கள் கூறுகையில்,

ஒமைக்ரான் வைரஸின் மாறுபாடுகளில் மற்ற வைரஸ்களை காட்டிலும், இந்த பிஏ.2 வைரஸ் அதி வேகமாக பரவக் கூடியதாக இருக்கிறது. மேலும், நுரையீரலையும் அதிகம் பாதிகக்கூடியதாக இருக்கிறது. மேலும், இந்த வைரஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பவர்களையும் அதிகம் பாதிக்கிறது. இது தொடர்பாக எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், பிஏ.1 வைரசால் பாதிக்கப்பட்ட எலிகளை காட்டிலும், இந்த பிஏ.2 வைரசால் பாதிக்கப்பட்ட எலிகள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளதாக ஜப்பான் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K