முதியவரை 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்ற மாநகர பேருந்து! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

0
78

முதியவரை 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்ற மாநகர பேருந்து! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

சாலையை கடக்க முயன்ற முதியவரை மாநகரப் பேருந்து 30 அடி தூரம் இழுத்துச் சென்று அவர் மீது பேருந்து ஏறிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஆவடி லாசர் நகர் பகுதியை சார்ந்தவர் முருகேசன். இவர் வயது 74. இவரது மனைவி மங்கையர்கரசி . இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஊரடங்கு காலத்தில் பணிகள் எதுவும் இல்லாததால், ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதால் இவருக்கு தனியார் நிறுவனத்தில் காவலாளி பணி கிடைத்துள்ளது.

சில தினங்களில் பணிக்கு செல்ல உள்ளதால் பஸ் பாஸ் எடுக்க ஆவடி பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து பூந்தமல்லிக்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.

இரவு 7 மணி அளவில் ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோவர்த்தனகிரி பேருந்து நிலையத்தில் இறங்க நினைத்த முருகேசன் இறங்கி பேருந்தின் முன்புறமாக சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அதை சற்றும் எதிர் பாராத பேருந்து ஓட்டுனர் பேருந்தை எடுக்கவே முதியவர் மீது பேருந்து ஏறி உள்ளது. முன்சக்கரம் முதியவரின் கால்களில் ஏறி இறங்கி உள்ளது. படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு அங்கேயே போராடியுள்ளார்.

ஆம்புலன்சுக்கு தகவல் அழிக்கவே ஆம்புலன்ஸ் ஒரு மணி நேரம் கழித்தே வந்துள்ளது. ரத்தம் அதிகமாக வெளியேறியதால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பேருந்து ஓட்டுநராக இருந்த பூந்தமல்லி பகுதியை சார்ந்த சங்கர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

வயதான போதிலும் தனது மனைவிக்கும் மகளுக்கும் உழைத்து சாப்பாடு போட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாமல் போய் உள்ளது.

author avatar
Kowsalya