மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தொடர் சோதனைகள் நடத்த மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

0
126
#image_title

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தொடர் சோதனைகள் நடத்த மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

கடந்த 2020ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய கொரோனா தொற்று நோய் அன்றைய நிலையில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டது, இந்த இக்கட்டான நிலையை சமாளிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு இலவசமாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட தடுப்பூசிகளை இலவசமாக செலுத்தியதன் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பரவல் குறைய தொடங்கியது.

கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கினாலும் நாட்டின் பல பகுதிகளில் லேசான தொற்று இறப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன, இவ்வாறு இருந்த நிலையில் ஆரம்ப காலத்தில் போடப்பட்ட கட்டுப்பாடுகளில் சிலவற்றை மாநில அரசுகள் தொடர்ந்து கடைபிடிக்கவும், பரிசோதனைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தொற்றுடன் வரும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

என்னதான் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிப்பு செய்து வந்தாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை, இந்த நிலையில் மீண்டும் தனது சுயரூபத்தை காண்பிக்க தொடங்கி உள்ளது கொரோனா. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு லேசான பரவலுடன் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா நேற்று வரை நாடு முழுவதும் சுமார் 2,151 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பாதிப்புகள் கடந்த ஐந்து மாதத்தில் ஒப்பிடும்போது, அதிகமாகும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே தற்போது பதினோராயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இனி வரும் நாட்களில் தொற்று பரவாமல் தடுக்க மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

author avatar
Savitha