இவர்கள் அனைவருக்கும் நாளை முதல் இந்த வகை தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி!

0
59

இவர்கள் அனைவருக்கும் நாளை முதல் இந்த வகை தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி!

நாடு முழுவதும் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே இந்த கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

அதனை தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டவகளுக்கும், அதற்கு அடுத்தபடியாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த சமயத்தில், கொரோனாவின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வந்தது. இதையடுத்து இணைநோய் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மூன்றாவது டோஸாக ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி 3-ந் தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை (புதன்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயது சிறுவர்களுக்கு ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K