இந்த வாரம் பண்டிகை நடக்க வேண்டுமானால் தமிழகத்திலுள்ள ஏழு மாநிலங்களும் இதை செய்ய வேண்டுமென மத்திய அரசு வார்னிங் ?..

0
89
The central government has warned that all the seven states in Tamil Nadu should do this if the festival is to take place this week?
The central government has warned that all the seven states in Tamil Nadu should do this if the festival is to take place this week?

இந்த வாரம் பண்டிகை நடக்க வேண்டுமானால் தமிழகத்திலுள்ள ஏழு மாநிலங்களும் இதை செய்ய வேண்டுமென மத்திய அரசு வார்னிங் ?..

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.மக்களின் நலனை கருத்தில் கொண்டு நாட்டில் வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு கொரோனா பரவல் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் தொடர்ந்து கொரோனா சரிவை சந்தித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 17 ஆயிரம் எண்ணிக்கைக்கு அதிகமாக பதிவாகி உள்ளது.

மேலும் இதுவரை டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் என்றும் பின்னர் பி.ஏ. வகை என தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த வைரசானது மீண்டும் உருமாற்றம் அடைந்து வருகிறது.இதனால் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் என அச்சம் ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில்  லேசான அறிகுறிகளே அதிகளவில் காணப்படுகின்றன என நிபுணர்கள் கூறியுள்ளனர்.இந்நிலையில் சுகாதாராதுறை நிபுணர்கள் கூறிய படி  பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளும்படியும் சமூக இடைவெளி மற்றும் முககவசங்களை அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படியும் அறிவுறுத்தி கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் தமிழகம் உஉள்ளிட்ட  7 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் டெல்லி, கேரளா, கர்நாடகா, மராட்டியம், ஒடிசா, தமிழகம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரவிருக்கிற பண்டிகை காலங்களில் பெருமளவில் கூட்டம் கூடும்.

இதனால் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட தொற்று நோய்களின் பரவல் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார். பருவகாலம் மற்றும் பண்டிகை காலங்களில் தொற்று ஏற்படுவதற்கான மற்றும் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ளது.

உணவு மற்றும் நீர் சார்ந்த தொற்றுகள் மற்றும் சுவாச பகுதியில் தொற்றுகள் ஏற்படுவது ஆகியவற்றுக்கான வாய்ப்பு  அதிகம்.கடந்த சில மாதமாக கொரோனா தொற்று அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.அதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் அனைவரும்  முறையாக பின்பற்றி கூட்டம் கூடாமல் இருக்க வேண்டும்.

இதனை மக்களாகிய நீங்கள் கருத்தில்  கொண்டு பண்டிகைகளை குடும்பத்துடனேயே கொண்டாடுங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி  தமிழகம் உள்ளிட்ட  ஏழு மாநிலங்களும் போதிய பரிசோதனைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றுவதனை ஊக்கப்படுத்த வேண்டும். தொற்று அதிகரிக்காமல் இருக்க தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதத்தில் கூறப்பட்டவை ஆகும்.

author avatar
Parthipan K