மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கும் மத்திய அரசு…! காங்கிரஸ் கடும் தாக்கு….!

0
54

பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை விடவும், கட்டணம் 30% அதிகமாக இருக்கிறது என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியன் ரயில்வே நாடு முழுவதும் மொத்தமாக 392 சிறப்பு ரயில்கள் இயங்கும் என்று அறிவித்திருக்கிறது. இந்த சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை விட கட்டணம் அதிகமாக இருக்கின்றது, என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து சிறப்பு ரயில்களில் கட்டண உயர்வை காரணம் காட்டி, மத்திய அரசை காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

சிறப்பு ரயில்களில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணம் சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் கௌரவ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது பண்டிகை காலங்களில் எதற்காக ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது? எதிர்வரும் மாதத்தில் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகள் வரவிருக்கின்றன. ஆகவே ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு, ஆயத்தமாகி வருகிறார்கள். ஆகவே ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதற்காக ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

ஆனாலும் அந்த சிறப்பு ரயில்களில், சாதாரண ரயில்களை விட 25 முதல் 30% வரை கட்டணம் அதிகமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக, படுக்கை வசதி உள்ள பிரிவிற்கு கட்டணம் அதிகமாக இருக்கின்றது. இந்த பண்டிகை காலத்திற்கான 392 ரயில்கள் இவை மொத்த உள்நாட்டு உற்பத்தி 23% வீழ்ச்சியை அடைந்துள்ளது. 2 கோடி ஊதிய காரர்கள் தங்கள் வேலைகளை எழுந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யாத என்ற எதிர்பார்ப்பில் நாட்டு மக்கள் இருக்கிறார்கள். ஆனாலும் பண்டிகை காலத்தில் அவர்களிடமிருந்து பணத்தை பிடுங்கும் ஒரு நடவடிக்கை போல் மத்திய அரசின் இந்த நடவடிக்கை தெரிகிறது. என்று அவர் கூறியிருக்கிறார். அதேநேரம் சிறப்பு ரயிலில் சாதாரண விலையை விடவும் கட்டணம் அதிகமாக இருக்கிறது. என்கின்ற செய்தி தவறான ஒன்று என ரயில்வே பதிலளித்துள்ளது.