அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு! அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு!

0
81

அதிமுகவின் பொதுக்குழு குறித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்க்கும் விதமாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அந்த தீர்ப்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுகுழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களை தன வசம் வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது.

மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகளவு பழனிச்சாமியை ஆதரிப்பதன் காரணமாக, நீதிமன்றம் இந்த முடிவை மேற்கொண்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் நீதிமன்றம் எப்பொழுதும் ஒரு தனிப்பட்ட கட்சியின் முடிவில் தலையிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தற்போது நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலமாக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதாவது எடப்பாடி பழனிச்சாமி தற்காலிக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது செல்லும் எனவும், அவருடைய வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்தார். தங்களுடைய வாரம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, தரப்பில் கடந்த மாதம் 11ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட இயலாது என்றும், உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய இந்த உத்தரவை எதிர்த்து இணைவுரங்கனைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவின் தனி நீதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்த இயலாது. அரசியல் கட்சியின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையிடுவதாக இருக்கிறது. கட்சி செயல்பாடுகளில் மட்டுமல்லாமல் பெரும்பான்மையினரின் விருப்பத்திலும் இந்த உத்தரவு குறுக்கீடு செய்கிறது. ஆகவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், விசாரணை முடிவடையும் வரையில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் துரைசாமி சுந்தர் மோகன் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாதங்களில் இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி சென்ற மாதம் 25ஆம் தேதி இந்த வழக்குக்கான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு செல்லும் எனவும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிப்பதாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதோடு எடப்பாடி பழனிச்சாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும், அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுகவைச் சார்ந்த இன்பதுரை தெரிவித்ததாவது, பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொது குழு செல்லும் என தீர்ப்பு வழங்கி இருக்கிறது நீதிமன்றம். அதிமுகவின் நோக்கம் முன்னேற்பாடுகள் உள்ளிட்டவற்றை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது, தொண்டர்களின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்கிறது.

ஏகோபித்த பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை எடப்பாடி பழனிச்சாமி பெற்றிருக்கிறார். ஆகவே பொதுக்குழு செல்லும் என்ற வாதத்தை முன் வைத்தோம், அதனை ஏற்றுக் கொண்டிருக்கிறது நீதிமன்றம், சட்ட விதிகளின்படி அதிமுகவின் பொதுக்குழு நடைபெற்றது என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டின் முன்பு அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும், தங்களுடைய மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.