செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு! கூடிய விரைவில் வெளியாகிறது தீர்ப்பு!!

0
139
#image_title
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு! கூடிய விரைவில் வெளியாகிறது தீர்ப்பு!
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அதிமுக கட்சியில் அமைச்சராக இருந்த போது அவர் மீது போடப்பட்ட புகார்களுக்கு கூடிய விரைவில் தீர்ப்பு வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அதிமுக கட்சியில் அமைச்சராக இருந்த பொழுது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் செய்ததால் அவருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலிசார் மூன்று வழக்குகள் தொடர்ந்தனர். இந்த மூன்று வழக்குகள் பல ஆண்டுகளாக எம்பி, எம்.எல்.ஏக்களுக்கு என விசாரணை நடக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை இருந்து வருகின்றன.
இதையடுத்து மத்திய அமலாக்கத்துறையானது அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பியது. இந்த வழக்குக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மத்திய  அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தொடர்ந்தது.
மத்திய அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்த இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த மேல்முறையீடு வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் “சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று கூறினார்”. அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் வாதங்களை எதிர்த்து பல தகவல்களை முன் வைத்தார். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பானது வரும் திங்கட்கிழமை அதாவது மே 15ம் தேதி வெளியாகவுள்ளது.
மே 15ம் தேதி இரண்டு நீதிபதிகளும் வேறு வேறு தீர்ப்பு அளித்தால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எந்தவொரு சிக்கலும் வராது என கூறுகிறார்கள். அதுவே இரண்டு நீதிபதிகளும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தால் செந்தில் பாலாஜி அவர்கள் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வார் என்று தெரிகிறது.
அடுத்த வருடம் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தல் வரையில் திமுக அமைச்சர்கள் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு குற்றச்சாட்டுகள் வந்தாலோ அல்லது அமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலோ அந்த சூழலை பாஜக கட்சி அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது. பாஜக மட்டுமில்லாமல் இன்னும் பல கட்சிகள் இந்த தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் திமுக அரசு பின்வாங்குமா அல்லது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு துணை நிற்குமா என்று பார்க்கலாம்.