Connect with us

Breaking News

வேகமாக வந்த அரசு பஸ் பின்னால் மோதியதில் கவிழ்ந்த கார்! 4 பேர் பலி!

Published

on

வேகமாக வந்த அரசு பஸ் பின்னால் மோதியதில் கவிழ்ந்த கார்! 4 பேர் பலி!

திட்டக்குடி அருகே கார் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆவட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதன் பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கட்டுப்பாட்டு இழந்த கார் 100 மீட்டர் தூரத்திற்கு வேகமாக இழுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த வேப்ப மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

Advertisement

இந்த கோர விபத்தில் காரில் இருந்த 2 பெண்கள், ஒரு குழந்தை, உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர்.  அங்கு படுகாயத்துடன் போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தின் காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement