மீண்டும் தத்தளிக்க போகும் தலைநகர்? வானிலை ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!

0
84

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் ஆரம்பித்ததிலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இது மழைக்காலம் தானா? அல்லது வெயில் காலமா? என்று நினைக்கும் அளவிற்கு சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.

இந்த நிலையில், இன்றைய தினம் தலைநகர் சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக மாறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தலைநகர் சென்னையில் கனமழை பெய்தது. மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்கப்படுகிறது அதாவது சென்னைக்கு கன மழை வருவது தாமதமாக நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்ததாவது, மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இது எதிர்வரும் தினங்களில் மேற்கு வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது, இதனால் இன்றைய தினம் ராமநாதபுரம், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு இரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் புவியரசன்.

இந்த நிலையில், நாளைய தினம் ராமநாதபுரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் கன முதல் மிகக்கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, நெல்லை, குமரி, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை மற்ற மாவட்டங்களில் அனேக பகுதிகளில் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

நாளை மறுநாள் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் கணம் முதல் மிக கனமழையும், சேலம், குமரி, நெல்லை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் அநேக பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுநாள் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை கனமழையும், நீலகிரி நெல்லை, கோயமுத்தூர், தூத்துக்குடி, குமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை மற்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையைப் பொருத்தவரையில் என்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்ற காரணத்தால் கன்னியாகுமரி கடல் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றைய தினம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதோடு நாளைய தினம் கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதேபோல 27 மற்றும் 28 தேதிகளில் தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்ற காரணத்தால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் இவ்வாறு பத்திரிக்கையாளர்கள் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியிருக்கிறார்.