Connect with us

Breaking News

கடைசி நேரத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்டிருக்கும் பேருந்து கட்டணம்! பயணிகள் அதிர்ச்சி!

Published

on

கடைசி நேரத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்டிருக்கும் பேருந்து கட்டணம்! பயணிகள் அதிர்ச்சி!

நாடு முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடவிற்கும் நிலையில் சென்னை வாசிகள் பலரும் நாளை முதலே சொந்த ஊருக்கு திரும்ப அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை முன்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இதனையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது.

இந்நிலையில் கடைசி நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் சொகுசுப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் தனியார் ஆம்னி பேருந்தை தேர்ந்தெடுத்து செல்ல நேரிடுகிறது.
சென்னையிலிருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு 1000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Advertisement

இந்நிலையில் இதற்கான முன் பதிவுகளும் நடந்து வருகிறது.21 ஆம் தேதிக்கான பயணத்திற்கு ஆம்னி பேருந்துகளில் அனைத்து சீட்டுகளும் நிரம்பிவிட்டன.ஒரு சில பேருந்துகளில் மட்டுமே இருக்கைகள் இருக்கின்றன.
மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான பயணங்களின் இருக்கைகளும் நிரம்பி விட்டன.இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகள் பேருந்து கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.அதாவது சென்னையிலிருந்து திருச்சி மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல ரூ. 3000 முதல் 3500 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆம்னி பேருந்துகள் பண்டிகை தினத்தையொட்டி கூடுதல் கட்டணம் விதிக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டும், விதிகளை மீறி தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement