பட்ஜெட் தொடர்பாக கேள்வி எழுப்பிய பிரேமலதா விஜயகாந்த்! அதிர்ச்சியில் மத்திய மாநில அரசுகள்!

0
57

சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் சமயத்தில் அதிமுக கூட்டணியில் சாதகமான சூழ்நிலை இல்லை என்று தெரியவருகிறது. பாஜக அதிமுக போன்ற கட்சிகள் மட்டுமே அதிமுக கூட்டணியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விஜயகாந்தின் தேமுதிக போன்ற கட்சிகளை அதிமுக கண்டுகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக ஒரு முடிவை எடுப்பதற்காக விரைவாக அழைப்புவிடுக்குமாறு அதிமுகவிற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் பங்குகொண்ட பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நல்லவை ,கெட்டவை என்ற அனைத்தும் ஒன்றிணைந்த ஒரு பட்ஜெட்டாக இது இருக்கிறது தற்போது தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கான தீர்வு என்பது இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை என்று ஆதங்கம் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல இந்த பட்ஜெட் எவ்வாறு மக்களுக்கு உபயோகமாக இருக்கப்போகிறது என்பதை சற்று பொறுத்திருந்து தான் காணவேண்டும். இப்போது நடைபெற்ற பட்ஜெட் ஒரு சடங்கைப் போல மாறிவிட்டது. வருடம்தோறும் வெளியீடு செய்து அந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகை அனைத்தும் பொதுமக்களை போய் சேருகிறதா என்பதை யாரும் கவனிப்பதே கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.

சசிகலா தொடர்பாக கேள்வி கேட்ட சமயத்தில், அதற்க்கு பதில் தெரிவித்த பிரேமலதா, சசிகலா தமிழ் நாட்டிற்கு வரும் சமயத்தில் தமிழக அரசியலில் எது போன்ற மாற்றம் நிகழும் என்பதை எதிர்பார்த்து தான் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.