ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட  மணப்பெண்! உடலை வாங்க மறுத்து சேலம் G.H ல் பரபரப்பு! 

0
98
The bride who took her own life in one month! Four people, including the husband, were caught!
The bride who took her own life in one month! Four people, including the husband, were caught!

ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட  மணப்பெண்! உடலை வாங்க மறுத்து சேலம் G.H ல் பரபரப்பு!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி காலனி பகுதியை சேர்ந்தவர் அத்தியப்பன்.இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார்.இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.அவர்களில் மூத்த மகள் வசுமதி(23) இவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவருடை மனைவி அமுதா. இவர்களுடைய மகன் வினோத்(31) என்பவருக்கும் வசுமதிக்கும்  கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,தகாத வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் கொடுமை செய்வதாக வசுமதி அவருடைய தந்தையிடம் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் சென்று வசுமதியை திருச்செங்கோட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.மேலும் மன உளைச்சலில் இருந்து வந்த வசுமதி கடந்த 30 ஆம் தேதி அவருடைய  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அதன் பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த வசுமதி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் இது குறித்து அத்தியப்பன் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வசுமதியின் கணவர் வினோத்,அவருடைய தந்தை ,தாய் மற்றும் தங்கை காவியா ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் வசுமதியின் கணவர் உள்பட நான்கு பேரும் தலைமறைவானதாக கூறப்படுகின்றது.நான்கு போரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.அதனை தொடர்ந்து திருமணமான 1 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வசுமதியின் உடலை வாங்க மறுத்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K