வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகள் கன்னத்தில் பளார் விட்ட மணமகன்! திருமணத்தை நிறுத்திய மணமகள்!

0
79

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சார்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் சென்னையில் இருக்கின்ற ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த எம்எஸ்சி பட்டதாரியான இளம்பெண் ஒருவருக்கும், நேற்று காலை காடாம்புலியூர் பகுதியில் இருக்கின்ற ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த சமயத்தில் மண்டபத்தில் பாட்டுக் கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் மணமக்கள் இருவரும் ஜோடியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள். அந்த சமயத்தில் மணமகளின் சகோதரர் உறவு முறை கொண்ட ஒரு வாலிபர் அங்கு வந்து நடனம் ஆடியிருக்கிறார்.

இது மணமகனுக்கு பிடிக்கவில்லையாம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் திடீரென்று ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மருமகளின் கன்னத்தில் பளாரென்று ஓங்கி அறைந்து விட்டார் இதில் மணமகள் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டாராம்.

இதை அங்கிருந்த யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை திருமண மண்டபமே அமைதியாகி போனது அந்த சமயத்தில் உறவினர்கள் அனைவரும் முன்னிலையில் மேடையில் தமிழ் கன்னத்தில் ஓங்கி அறைந்த சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று தெரிவித்த மணமகள் கதறி அழுதாராம்.

மணமகளுக்கு அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் தெரிவித்தபடி இருந்தார்கள் ஆனால் மணமகளும் இப்போதே இப்படி அடிக்கிறார் என்றால் திருமணத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என ஆவேசமாக தெரிவித்துவிட்டு திருமணத்தை நிறுத்தும் படி தெரிவித்துவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

இதன் காரணமாக, ஆத்திரமுற்ற மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெண் வீட்டாரிடம் சமரச பேச்சுவார்த்தைகள் ஈடுபட்டார்கள். அந்த நேரத்தில் மணமகன் தான் செய்தது தவறு என்று தெரிவித்து மணமகன் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

ஆனாலும் பெண் வீட்டை சேர்ந்தவர்கள் சமாதானம் அடையவில்லை திருமணத்திற்கு கொண்டு வந்து சீர்வரிசை பொருட்கள் உள்ளிட்டவற்றை லாரியில் ஏற்றிக் கொண்டு மணமகளை காரில் பண்ருட்டிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

பண்ருட்டிக்கு சென்ற மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இரவோடு இரவாக கலந்து பேசி செஞ்சி அருகே இருக்கின்ற உறவினர் ஒருவரை மணமகனாக தேர்வு செய்தனர். இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். இதனை தொடர்ந்து உடனடியாக அவர் பண்ருட்டிக்கு அழைத்து வரப்பட்டார். அதன் பிறகு நேற்று காலை திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைத்து மணப்பெண்ணுக்கும், திடீர் என்று வந்த மாப்பிள்ளைக்கும் திருமணம் நடைபெற்றது.