திருமணத்தின் போது தீக்குளித்த மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை! கைத்தட்டி வரவேற்ற விருந்தினர்!

0
70
The bride and groom on fire during the wedding! Applause Welcome Guest!
The bride and groom on fire during the wedding! Applause Welcome Guest!

திருமணத்தின் போது தீக்குளித்த மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை! கைத்தட்டி வரவேற்ற விருந்தினர்!

தற்போது நடைபெறும் திருமணம் அனைத்தும் மற்ற திருமணத்தை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று எண்ணி பல முறைகளில் தங்களது வரவேற்பை வைக்கின்றனர். மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை இருவரும் நடனமாடிக் கொண்டு வரவேற்பறைக்கு வருவது, பூவுகுள்லிருந்து இருவரும் காட்சி அளிப்பது என வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்துகின்றனர். அதேபோல திருமணத்திற்குமுன் போட்டோஷூட் திருமணத்திற்குப்பின் போட்டோஷூட் என்றும் நடைமுறை படுத்தி உள்ளனர்.

அந்த வகையில் வெளிநாட்டில் வித்தியாசமான முறையில் மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை இருவரும் திருமணம் செய்துள்ளனர். ஹாலிவுட்டில் பிரபலமான ஸ்டண்ட் கலைஞர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் படத்தில் வேலை செய்து அதன் மூலம் காதலித்து வந்துள்ளனர். ஹாலிவுட் ஜோடி கேப் ஜெசப் மற்றும் ஆம்பீர் ஸ்டண்ட் கலைஞர்கள் இருவரும் தங்களது வரவேற்பு நிகழ்ச்சி வித்தியாசமாக நடத்தியுள்ளனர். இருவரும் வரவேற்பறைக்கு வருவதற்கு முன் தன் முதுகின் பின்பு தீயை வைத்துக் கொண்டனர்.

அவர்கள் முதுகின் பின் கொழுந்துவிட்டு எரிய இருவரும் நடந்து வந்துள்ளனர். அவர்கள் நடந்து வரும் வேளையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கைதட்டி வரவேற்றனர். பின்புறம் தீ கொழுந்து விட்டு எரியும் வேலையில் இருவரும் ஜோடியாக நடந்து வந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர்கள் வர பேர் பாறைக்குள் வந்ததும் இருவரின் பின்புறமிருந்து தீயை அணைத்தனர். இது விபரீதமாக இருந்தாலும் யாரும் திருமணத்தில் செய்யாதது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.அவர்கள் ஸ்டண்ட் கலைஞர்கள் என்பதால் அதன் ஆபத்துக்கள் முன்கூட்டியே தெரிந்து அதற்கான மருத்துவவசதிகள் அனைத்து தயார் நிலையில் வைத்து இதை செய்துள்ளனர்.ஆனால் இந்த வீடியோவை பார்த்துவிட்டு யாரும் தகுந்த முன்னேற்பாடுகள் இன்றி செய்ய நேர்ந்தால் உயிர் போகும் நிலைக்கு தள்ளிவிடும்.