இறந்து விட்டார் என பிணவறைக்கு அனுப்பப்பட்ட உடல்! ஐந்து நாட்கள் கழித்து உயிர் இழந்த பரிதாபம்!

0
54
The body sent to the morgue as dead! It is a pity that he lost his life five days later!
The body sent to the morgue as dead! It is a pity that he lost his life five days later!

இறந்து விட்டார் என பிணவறைக்கு அனுப்பப்பட்ட உடல்! ஐந்து நாட்கள் கழித்து உயிர் இழந்த பரிதாபம்!

டெல்லியின் கிழக்கு பகுதியில் மொராதாபாத் என்ற இடத்தில் கடந்த நவம்பர் 18 ம் தேதி ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் ஸ்ரீகேஷ் குமார் என்ற 40 வயது மதிக்கத் தக்க நபர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். எனவே அவரை மீரட்டில் உள்ள லாலா லஜ்பத் ராய் நினைவு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். எனவே அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பிணவறைக்கு கொண்டு சென்று வைத்தனர். அங்கு ஏழு மணி நேரத்திற்கும் மேலாக அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு அவரது உடலை அடையாளம் காண்பதற்காக அவரது வீட்டிலிருந்து, உறவினரான மைத்துனர் வந்தார்.

அவர் பிணவறைக்கு சென்று பார்த்தபோது, அந்த நபரின் உடலில் அசைவு ஒன்றை கண்டார். உடனடியாக இது குறித்து மருத்துவர்களுக்கு அவர் தகவல் தெரிவித்தார். எனவே மருத்துவர்கள் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் அங்கு அவருக்கு ஐந்து நாட்கள் சிகிச்சை தரப்பட்டது.

ஆனால் துரஅதிர்ஷ்ட வசமாக ஐந்து நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துவிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை அவர் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் அவரது மரணம் குறித்து அவரது சகோதரர் கூறும்போது, எனது சகோதரர் உயிருக்கு மிகவும் போராடி உள்ளார். அவர் வாழ விரும்பினார். ஆனால் ஐந்து நாட்களில் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்துள்ளது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் அவரது பெயரைக் கூறும் போதெல்லாம் அவர் பதிலளித்தார். எனவே அவர் குணமடைய சாத்தியக்கூறுகள் பலவகையிலும் இருந்தது. ஆனால் அவருக்கு மூளையில் ரத்த உறைவும் ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மரணத்திற்கு காரணமான நபர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைப்போம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சிவ் சிங் கூறும்போது இவ்வாறு கூறினார். அவசர மருத்துவ அதிகாரி நோயாளியை அதிகாலை 3 மணிக்கு பார்த்தார். அப்போது நோயாளிக்கு இதயத் துடிப்பு இல்லை. ஆனால் காலையில் ஒரு போலீசார் குழுவும், அவரது குடும்பத்தினரும் அவர் உயிருடன் இருப்பதாக கூறினார்கள். இதனை டாக்டர்களின் அலட்சியம் என்றும் கூற முடியாது. இது ஒரு அரிதான நிகழ்வுதான் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.