தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்று பாஜகதான் முடிவு செய்யும்…! எல் முருகன் ஆவேச பேட்டி…!

0
72

தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகவின் தேசியத் தலைமை தான் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எங்களுடன் அக்கட்சியினர் ஆலோசனை செய்யவில்லை என பாரதிய ஜனதா வருத்தத்தில் இருக்கின்றதா என்பது இதுவரை தெரியவில்லை.

ஏனென்றால் பாஜக தலைவர்கள் அனைவருமே எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்று இதுவரை எந்த ஒரு அறிவிப்போ அல்லது அறிக்கைகளை வெளியிடவில்லை அதேசமயம் எடப்பாடி பழனிசாமி பாராட்டுகிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகின்றது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கின்றது இக்கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று தெரிகிறது.

தொகுதிப் பங்கீடுகள் மற்றும் பேச்சுவார்த்தை ஆகியவை பற்றி எல்லாம் பேச இன்னும் பல மாதங்கள் இருக்கின்றது என்கின்ற போதிலும் மிக முக்கிய முடிவான முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதத்தில் பாஜகவின் நிலை என்ன என்பது குறித்து இன்றுவரை வெளிப்படையாக தெரியவில்லை எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை வரவேற்கும் பாரதிய ஜனதா கட்சியினர் அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வது குறித்து பாஜகவின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் பாஜகவை பொருத்தவரையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக என எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கலாம் இது சம்பந்தமாக தேர்தல் நெருங்கியவுடன் தேசிய தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் அதன் பின்பு அளித்த பேட்டி ஒன்றில் இந்தக் கூட்டணியில் தொடர்ந்து இருக்கக் கூடாது என்று நான் சொல்ல விரும்பவில்லை அதிமுக கூட்டணியில் தான் நாங்கள் இருக்கின்றோம் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அவர் பேட்டியளித்த ஒரு சில தினங்களுக்கு பின் தேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் அதிமுக முதல்வர் வேட்பாளர் சம்பந்தமாக பாஜக அளித்த பேட்டியில் ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக உடன் கூட்டணி அமைத்து இருக்கின்றது தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறுவது சகஜமான ஒன்றுதான் என்று தெரிவித்திருக்கிறார்.

பாஜக மாநில தலைவர் திரு எல் முருகன் நேற்றைய தினம் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக தாமரை தடாகம் அலுவலக திறப்பு விழாவில் சென்னையில் இருக்கின்ற சூளை அலுவலகத்தை திறந்து வைத்தார் அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கொரோனா தோற்று நாட்டில் குறைந்து வருகின்றது இந்த சூழ்நிலையில் பண்டிகை காலங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று கே எஸ் அழகிரி கூறியிருக்கின்றார் அவர் எங்கள் கூட்டணியை தீர்மானிக்க இயலாது பிரதமர் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது சம்பந்தமாக பேசி வருகின்றார் பண்டிகை காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் உரையின் நோக்கம் இப்போது இந்திய பொருளாதாரம் எழுச்சி பெற்று வருகின்றது இந்த பேட்டியின் மூலமாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் தேசியத் தலைமை ஏற்றுக் கொண்டு விட்டதா இல்லையா என்பதை வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.