திமுகவிற்குள் உளவாளியை அனுப்பிய பாஜக! உளவாளியை கண்டு அதிர்ந்துபோன திமுக!

0
77

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான வேலையில் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள்.

அந்த வகையிலே, எதிர்க்கட்சியான திமுக பல வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கின்றது. அதில் முதன்மையாக பார்க்கப்படுவது இந்த தேர்தலில் திமுகவிற்கு வியூகம் வகுத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவனத்தை களமிறக்கி இருப்பதுதான். இந்த நிறுவனமானது கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தின்போது பணியாற்றியது என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்குப் பிறகு ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது உதவியாக இருந்தது பலரும் அறிந்ததே.

அந்த வகையிலே இப்பொழுது தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சியான திமுகவிற்கு ஆதரவாக களம் இறங்கி இருக்கின்றது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்திற்கு சம்பளமாக மட்டும் திமுக தரப்பில் இருந்து சுமார் 300 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஒப்பந்தம் சம்பந்தமான அனைத்து பணிகளும் முடிவடைந்து பிரச்சாரப் பணிகளில் ஸ்டாலினுக்கு உதவிபுரிய தொடங்கியது இந்த நிறுவனம் அதன் பிறகு ஸ்டாலினுக்கும் சரி அந்த கட்சி நிர்வாகிகளுக்கும் சரி ஓய்வே கிடைக்கவில்லை. அடுத்தடுத்து பிரச்சாரங்கள் மக்களுக்கு உதவி புரிவது போன்ற பல்வேறு வேலைகளில் தேனீக்களைப் போல செயல்பட்டு வருகிறார்கள் திமுகவின் தலைமையும், திமுகவின் நிர்வாகிகளும்.

ஆனால் இதில் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அந்தந்த தொகுதிகளில் செய்யும் மக்களுக்கான அனைத்து உதவிகளையும் அவர்களுடைய சொந்தக் காசில் இருந்து செய்கிறார்கள் என்பதே பலரின் கூற்றாக இருந்துவருகிறது.

இதில் கொடுமை என்ன என்று கேட்டால் கட்சியின் நிர்வாகிகள் செலவு செய்யும் பணத்தில் மொத்தப் பணமும், அந்த கட்சி நிர்வாகிகளின் சொந்தப் பணத்திலிருந்து தான் செலவு செய்யப்படுகிறதாம். அதோடு கட்சியின் தலைமை எங்களுக்கு வேலை கொடுப்பதில் தான் குறியாக இருக்கிறது, எங்களுடைய செலவுகளுக்கு சற்று கூட தோள் கொடுப்பதற்கு திமுகவின் தலைமை தயாராக இல்லை என்று ஆதங்கம் தெரிவிக்கிறார்களாம் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.

சரி இதெல்லாம் போகட்டும் இந்த ஐபேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் பற்றி எடுத்துக் கொண்டோமானால், அவர் பீகாரைச் சேர்ந்த ஒரு பிராமணர் என்று சொல்லப்படுகிறது.

திமுக என்பது ஆரம்ப காலத்திலிருந்தே பிராமணர்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சி எனவும், அந்தக் கட்சியின் நிர்வாகிகளே பல இடங்களில் தெரிவித்து வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் இப்பொழுது தேர்தல் வேலைகளில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிராமணரை தேர்தல் வியூக தொகுப்பாளராக நியமித்து இருக்கின்றாரே ஸ்டாலின். இது எந்த அளவிற்கு நமக்கு பயன் கொடுக்கும் என்று அந்தக் கட்சி நிர்வாகிகள் புலம்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல், சென்ற 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர் இந்த பிரசாந்த் கிஷோர் அப்படி இருக்கும்போது இவர் நமக்கு எப்படி உதவி புரிவார் என்றும், அந்தக் கட்சியின் நிர்வாகிகள் ஆதங்கம் தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது.

சரி அப்படி என்னதான் செய்துவிடுவார் இந்த பிரசாந்த் கிஷோர், எதற்காக திமுகவின் நிர்வாகிகள் இப்படி பயந்து அஞ்சி நடுங்குகிறார்கள்?

2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக களமிறங்கிய பிரசாந்த் கிஷோர் அவர்களுக்கும், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், ஒரு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. திமுகவை ஒழித்துக்கவேண்டும் என்பது தான் பாஜகவின் இலக்கு என சோல்லப்படுகிறது .இந்த நிலையில் , எதிர்வரும் தேர்தலில் திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்க ஸ்டாலினால் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்ட இருந்தாலும்கூட அவர் நரேந்திர மோடி அவர்களின் சொற்படி தான் நடப்பார் என்பது திமுகவின் நிர்வாகிகள் மனநிலையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதை நரேந்திர மோடியுடன் பொருத்திப் பார்த்தால், அவர் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த சமயத்தில் அவர் செயல்பட்ட விதம், இப்பொழுது பிரதமராக இருக்கும்போது செயல்படும் விதம், அனைத்தையும் ஒன்றிணைத்து பார்த்தால் அவர் ஒரு அரசியல் ராஜதந்திரி என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கருத்தாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளை எவ்வாறு நிறுத்த வேண்டும் அவர்களுடைய கருத்திற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் எதிர்க்கட்சிகளை கேள்வியை கேட்க விடாமல் எவ்வாறு வாயடைக்க வேண்டும், என்பது பற்றியெல்லாம் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றாக தெரியும் என்று சொல்கிறார்கள்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரசாந்த் கிஷோர் ஒரு பிராமணர் என்பதுதான் பிராமணர்களுக்கு எதிராக தொடங்கப்பட்டு பிராமணர்களின் எதிர்ப்பாலேயே பெரிய அளவில் வளர்ந்து வந்த கட்சி திமுக. பிராமணர்களின் எதிர்பால் வளர்ந்த இந்த கட்சி இப்பொழுது ஒரு பிராமணரை தேர்தல் வியூக தொகுப்பாளராக ஏற்றிருப்பது அந்த கட்சியினராலேயே ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று சொல்கிறார்கள்.

இத்தனை ஆண்டு காலமாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த நேரத்திலெல்லாம், தேர்தலில் எவ்வாறு பிரச்சாரம் செய்யவேண்டும்,எப்படி மக்களை சென்று சந்திக்க வேண்டும் என்று திமுகவை சார்ந்த பல அறிவார்ந்த தலைவர்கள் திமுகவிற்கு ஆலோசனை கொடுத்து வந்தார்கள். அப்படித்தான் இத்தனை ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் அசைக்க முடியாத ஒரு சக்தியாக திமுக இருந்து வருகிறது என்று சொல்கிறார்கள்.

அப்படியிருக்க, இத்தனை ஆண்டுகாலம் ஒன்றோடு ஒன்றாக இருந்து தேர்தல் நேரத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு கட்சி பணிகளிலும் ஓய்வே இல்லாமல் செயல்பட்டு வந்த தலைவர்களை எல்லாம் நம்பாமல், இப்பொழுது பீகாரில் இருந்து வந்த ஒரு பிராமணரை வைத்து தேர்தல் வேலைகளில் இறங்கி இருக்கின்றாரே தலைவர் என்று கட்சி நிர்வாகிகள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும் திமுக தலைமை பிரசாந்த் கிஷோர் மீது அதீத நம்பிக்கை கொண்டு இருக்கிறது. ஆகவேதான் அவர் என்ன சொன்னாலும் அதனை உடனே நிறைவேற்றியும் விடுகிறது.

ஆனாலும் பிரசாந்த் கிஷோர் மீது திமுகவின் நிர்வாகிகளுக்கு நம்பிக்கையின்மை என்பது சற்று அதிகமாகவே இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு காரணம் என்னவென்று கேட்டால் அவர் ஒரு பிராமணர் என்ற கூற்றை முன்வைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆம் பிராமணர்களின் எதிர்ப்பால் வளர்ந்த ஒரு கட்சி ஒரு மாநிலத்தில் ஆட்சியை பிடித்து அரசியல் நகர்வுகளை மாற்றி அமைக்கும் அளவிற்கு அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பிராமண எதிர்ப்பு கட்சிக்கு ஒரு பிராமணர் தேர்தல் வியூக வகுப்பாளராக வந்தால் என்ன நடக்கும் என்பது அந்த கட்சியின் நிர்வாகிகள் இடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்தையும் திமுக தன்னுடைய சின்னமான உதயசூரியன் சின்னத்தில் தேர்தலின் பொழுது நிற்க வைக்க முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் திமுகவின் கூட்டணி கட்சிகள் திமுக உடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ,மற்றும் மதிமுக போன்ற கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடவே விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கூட்டணியில் தற்போது விரிசல்கள் ஏற்பட தொடங்கி இருக்கின்றன என்ற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.

இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் எதிர்க்கட்சிகளின் தனி சின்ன கோரிக்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். இது திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களை மேலும் கடுப்பாக்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

ஏற்கனவே திமுகவின் கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா? அல்லது அதற்குள் உடைந்துவிடுமா ? என்ற சூழ்நிலை இருக்கும் நேரத்தில் மு. க. அழகிரி இன்னொருபுறம் புது கட்சியை ஆரம்பிக்க போவதாக தெரிவித்து வருகிறார். நேற்றைய தினம் அவருடைய ஆலோசனை கூட்டம் அவருடைய ஆதரவாளர்களுடன் நடந்தது.

அழகிரியின் ஆதரவாளர்கள் உடன் உற்சாகமாக நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில், விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார் மு. க .அழகிரி அப்படி அவர் புதுக்கட்சி தொடங்கினால் திமுகவின் கட்சியே உடையும் நிலைவரும் என்று தெரிவிக்கிறார்கள்.

ஏற்கனவே கூட்டணி நீடிக்குமா? என்ற பீதியில் இருந்து வந்த திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு அழகிரி கட்சி தொடங்கப் போகிறேன் என்று தெரிவித்தது இன்னும் சற்று அதிகமாகவே பயத்தை ஏற்படுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது.

என்னதான் ஸ்டாலின் கோடிகோடியாக பணம் செலவழித்து தேர்தல் வியூகத்தை வகுத்து வந்தாலும், ஒருபுறம் கட்சியும் மறுபுறம் கூட்டணியும் உடையும் நிலையில் இருப்பது ஸ்டாலின் அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்திருப்பதாக கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள.

ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட மிகப்பெரிய சலசலப்பு நடந்துகொண்டிருந்த நேரத்தில், அதிமுக உடையப் போகிறது ஆட்சியும் இன்னும் மூன்று மாதங்களில் கலைந்துவிடும் என்று தெரிவித்த ஸ்டாலினின் நிலையோ இப்போது படு மோசமாகி போய்விட்டது என அதிமுகவின் நிர்வாகிகள் கிண்டல் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் நிலை இப்படி இருக்கையில், மறுபுறமும் ஆளும் கட்சியான அதிமுக தேர்தல் வேலைகளில் மிக ஜரூராக இறங்கிவிட்டது. மக்களுக்கு உதவி வருவதாக இருந்தாலும் சரி ,தேர்தல் பிரச்சாரம் செய்வதாக இருந்தாலும் சரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதையெல்லாம் பார்த்து திமுக சற்றே கலக்கம் அடைந்து இருப்பதாக சொல்கிறார்கள்.

இத்தனை நெருக்கடிகளையும் கடந்து திமுக எதிர்வரும் தேர்தலில் வென்று ஆட்சி கட்டிலில் அமருமா என்பது திமுக அடிப்படையாக வைத்திருக்கும் கடவுள் மறுப்பு கொள்கையை கடந்து, அந்த கடவுளுக்கே தெரியும் என்று அந்தக் கட்சியின் நிர்வாகிகள் புலம்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.