பாஜக ஆட்சி தமிழர்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது; ரூ1000 கோடி கடனுதவி;? பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார்?

0
70

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார் “பிரதமர் மோடி அறிவித்த சுய சார்பு பாரதம் திட்டத்தின்” மூலம் தொழில்நுட்பம், டெமோகிராபி பொருளாதாரம், உட்கட்டமைப்பு மேம்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட ஐந்து வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன”. இதற்காக ஐந்து கட்டங்களாக மொத்தம் ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் SC,ST,OBC போன்ற
அனைத்துப் பிரிவினருக்கும் தனித்தனியே பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

லண்டனில் அம்பேத்கர் வசித்த வீடு மத்திய அரசால் SC,ST சமூக மாணவர்கள் மேல்படிப்புக்காக லண்டன் செல்லும்போது அவர்கள் அந்த வீட்டில் தங்கிப் படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் இந்தியாவில் 52 சதவீதம் OBC பிரிவினர் உள்ளனர்.அவர்களுக்காக 27 சதவீத இட ஒதுக்கீடும், ஏழைப் பெண்களுக்கு இதுவரை 38 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

அடுத்தாக கோவை மண்டலத்திற்கு உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடிக்கும் மேல் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சாலையோர வியாபாரிகளின் நலனுக்காகவும் பல்வேறு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மத்திய பாஜக ஆட்சியில், தமிழகத்தின் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.தமிழர்களின் சமூக,பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கும்,காவிரி மேலாண்மை வாரியமுதிற்கும்,விவசாயத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதியுதவியும்,விவசாயிகளுக்கு தலா ரூ.6,000 நிதியுதவி வழங்கியும் உள்ளது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் பாஜக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்றும்,மத்திய பாஜக அரசு ஒருபோதும் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யாது,என்றும் ஜி.கே.செல்வகுமார் தெரிவித்தார்.

author avatar
CineDesk