ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை! சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
92

இணையதள விளையாட்டு தடை மசோதா இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினால் தாக்கம் செய்யப்படவிருக்கிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது. முன்னதாக இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 9ம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய சட்டசபை கூட்டத் தொடரில் தமிழகத்தில் இணையதள ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை சட்டம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமைகள் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி தன்னுடைய அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பித்தது. அதன் பிறகு ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசர சட்டம் தயாரிக்கப்பட்டது.

இதற்கு கடந்த சட்டம் ஒரு மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டது. பிறகு இந்த அவசர சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது இந்த நிலையில் இணையதள சூதாட்டம் விளையாட்டுக்கான தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 9 தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.

சட்டசபை கூட்டத் தொடரில் நிரந்தர சட்டம் இயற்றப்படும் என்று தமிழக அரசு சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பமானது இன்றுடன் சட்டப்பேரவை முடிவடையுள்ள நிலையில், இன்று இணையதள விளையாட்டு தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று தகவல் கிடைத்திருக்கின்றன.