11 மாவட்டங்களுக்கு இந்த தடை தொடரும்!- அரசு அறிவிப்பு

0
83

தமிழ்நாட்டில் ஜூன் 28-ஆம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு முடியும் நிலையில் நேற்று முதல்வர் மருத்துவ வல்லுனர்கள் உடன் கூடிய ஆலோசனையின் அடிப்படையில் நோய்த்தொற்றின் தன்மையை குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு செய்து தமிழக மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கிலும் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது என ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தொற்று பாதிப்பின் அடிப்படையில் மூன்று வகைகளாக மாவட்டங்களை பிரித்துள்ளனர்.

வகை 1 : 11 மாவட்டங்கள், கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் ஈரோடு சேலம் கரூர் நாமக்கல் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்கள்.

வகை2: 23 மாவட்டங்கள், தேனி ,தென்காசி ,திருநெல்வேலி ,திருவள்ளூர் ,திருவண்ணாமலை, தூத்துக்குடி ,திருச்சி ,விழுப்புரம் ,வேலூர் மற்றும் விருதுநகர், அரியலூர் ,கடலூர் ,தர்மபுரி ,திண்டுக்கல் ,கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ,கிருஷ்ணகிரி ,மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ,ராணிப்பேட்டை, சிவகங்கை,

வகை 3,: 4 மாவட்டங்கள், சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்கள் தொற்று மிக குறைந்துள்ளதாக பிரிக்கப்பட்டுள்ளது.

பதினோரு மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றும்,

வகை இரண்டில் உள்ள 23 மாவட்டங்களில் கூடுதலான தகவல் தரப்பட்டு உள்ளது என்றும், கூறியுள்ளது.

வகை மூன்றில் உள்ள சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் பயணிக்க பொது போக்குவரத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50% அமர்ந்து பயணிக்க பேருந்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது, வாடகை வாகனங்கள் ஆட்டோ டாக்சி பயணிகளின் பதிவு இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படுகிறது,

author avatar
Kowsalya