மீன் பிடி தடைகாலம் முடிந்தது! மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்! பரபரப்பாக காணப்பட்ட கடலூர் துறைமுகம்!

0
66
#image_title

மீன் பிடி தடைகாலம் முடிந்தது! மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்! பரபரப்பாக காணப்பட்ட கடலூர் துறைமுகம்!

 

கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. இதையடுத்து மீன்பிடி காலம் முடிந்ததை அடுத்து கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் கடலூர் துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது.

 

கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன் பிடி தடைக் காலமாக அரசு அறிவித்தது. மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 14ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் அமலில் இருந்தது.

 

இந்த மீன்பிடி தடைக் காலம் கடந்த ஜூன் 15ம் தேதி முடிந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்குள் ஆர்வமாக மீன் பிடிக்க சென்றனர். இந்த மீன்பிடி தடை காலத்தில் சிறியவகை படகுகள் மட்டும் மீன் பிடிக்க சென்றது. அப்போது சிறிய வகை மீன்கள் குறைந்த அளவே மட்டுமே கிடைத்தது. இதன் காரணமாக மீன்களின் விலை கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து காணப்பட்டது. மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டதால் அசைவம் சாப்பிடும் நபர்கள் இறைச்சியை வாங்கி சென்றனர்.

 

இதையடுத்து மீன்பிடி தடைகாலம் முடிந்து அனைத்து வகையான படகுகளும் மீன் பிடிக்க கடலுக்குள் சென்று வந்ததால் முதல் ஞாயிற்றுக் கிழமையான இன்று அதிக அளவில் மீன்கள் விற்பனைக்காக வந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அசைவ பிரியர்கள் அதிகாலை முதலே கடலூர் துறைமுகத்தில் வியாபாரிகளுடன் போட்டி போட்டு அதிகளவு மீன்களை வாங்கி சென்றனர். கடந்த 61 நாட்களாக உயர்ந்து காணப்பட்ட மீன்களின் விலை இன்று குறைந்ததால் மக்கள் அதிகளவு மீன்களை வாங்கி சென்றனர்.

 

மீன்பிடி தடை காலத்தில் ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சரம் மீன் தற்போது கிலோ 800 ரூபாய்க்கும், ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட வவ்வால் மீன் கிலோ 600 ரூபாய்க்கும், ஒரு கிலோ 450 ரூபாய்க்கு விற்கப்பட்ட சங்கரா மீன் 300 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்கப்பட்ட கனவா மீன் 200 ரூபாய்க்கும் இன்று விற்கப்படுகின்றது.

 

அதைப் போலவே ஒரு கிலோ 450 ரூபாய்க்கு விற்கப்பட்ட இறால் இன்று 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடலூர் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான.பொதுமக்களும் வியாபாரிகளும் குவிந்தனர். இதனால் கடலூர் துறைமுகம் பரபரப்பாக காணப்படுகின்றது.