இந்திய சுழல் தாக்குதலில் சிக்கிய ஆஸ்திரேலியா அணி 91 ரன்களில் சுருண்டது! இன்னிங்ஸ் & 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

0
297
#image_title

இந்திய சுழல் தாக்குதலில் சிக்கிய ஆஸ்திரேலியா அணி 91 ரன்களில் சுருண்டது! இன்னிங்ஸ் & 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! 

223 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து முதல் இன்னிங்சில் களம் இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களையும், 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களையும், எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா 120 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.இன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அடுத்து களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரவீந்திர ஜடேஜா 70 ரன்களிலும் அக்சர் பட்டேல் 84 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் உணவு இடைவேளைக்குப் பின்னர் 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. உஸ்மான் கவஜா மற்றும் டேவிட் வார்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஆட்டத்தைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் தங்கள் சுழலை தொடங்கினர்.

அஸ்வின் பந்துவீச்சில் 5 ரன்னில் கவாஜா வெளியேற அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன்  17 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து 10 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க ஆட்டக்காரரான வார்னர் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த மெட் ரென்ஸா 2 ரன் எடுத்த நிலையில் அவரும் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேறினார்.

அடுத்தடுத்து வந்த வீரர்களையும் அஸ்வின், முகமது ஷமி மற்றும் ஜடேஜா தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டிருந்தனர். இறுதியில் 100 ரன்களை கூட தொடாத நிலையில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பரிதாபமாக இழந்தது.

இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் 91 ரன்னில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்படி இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.