அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிப்புக்கு உரியது! – முதல்வர்

0
82
The attack on them is very harsh! - Chief
The attack on them is very harsh! - Chief

அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிப்புக்கு உரியது! – முதல்வர்

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிப்பு கூடியது எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பத்திரிகையாளர் உட்பட ஒன்பது பேர் பலியாகி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, வன்முறை அதிகம் நடந்துள்ளது. கடந்த 300 நாட்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். அதனை மத்திய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் ஆகும்.
இத்தகைய கொந்தளிப்புச் சூழ்நிலையை அறியச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் அகிலேஷ், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொந்தளிப்புக்குக் காரணமானவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.