மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த கல்லூரிகள் இதனைப் பெற விண்ணப்பிக்கலாம்!

0
148
The announcement made by the State Director of Technical Education! These colleges can apply to get this!
The announcement made by the State Director of Technical Education! These colleges can apply to get this!

மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த கல்லூரிகள் இதனைப் பெற விண்ணப்பிக்கலாம்!

தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் சிறுபான்மை அந்தஸ்து பெற மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறையில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பொறியியல் பட்டப்படிப்புகள், பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகள், நடத்தும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையியன் அந்தஸ்து வழங்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அத்துறையின் 2022-23 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

மேலும் அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின் படி சிறுபான்மைய பொறியியல் கல்லூரிகள் மற்றும் சிறுபான்மை பாலிடெக்னிக் கல்லூரிகள் சிறுபான்மையினர் அந்தஸ்து பெறுவதற்கு மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K