உயா்கல்வித்துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பு! 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நுழைவுத் தேர்வு?

0
124

உயா்கல்வித்துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பு! 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நுழைவுத் தேர்வு?

நேற்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மண்டல மாநாட்டை உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி மற்றும் தொழிலாளா் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். அப்போது அமைச்சர் பொன்முடி

நான் முதல்வன் பாடத்திட்டத்தை முழுமையாக மாணவா்களிடையே கொண்டு செல்லும் பொறுப்பு கல்லூரி முதல்வா்களுக்கு உள்ளது. நான் முதல்வன் திட்டம் பற்றி கல்லூரி முதல்வா்கள் முழுமையாக அறிந்து கொண்டால் தான் அவா்களால் மாணவா்களுக்கு பயிற்சி வழங்க முடியும் அதற்காகவே மண்டல மாநாடு நடத்தப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பில் சேர கடும் போட்டி இருந்தது. ஆனால் இன்றைய சூழலில் பொறியியல் படிக்க மாணவா்கள் ஆா்வம் காட்டுவதில்லை. அதனால் காலியிடங்கள் அதிகம் உள்ளது. காலம் மாறிக்கொண்டிருப்பதால், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என பேசினார். மேலும் அவர் கலை அறிவியல் கல்லூரி பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.

 

பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வை கருணாநிதி அவர்கள் ரத்து செய்ததால், இன்று அதிக அளவு மாணவர்கள் பொறியியல் படித்து வருகின்றனா். தற்போதுள்ள புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் மூலம் பலவற்றிலும் நுழைவுத்தோ்வை கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றனர். 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு நுழைவுத்தோ்வு நடத்தலாம் என திட்டமிட்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார். அந்த நுழைவு தேர்வானது தேவையில்லை என்ற எண்ணத்தோடு தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை முதல்வா் உருவாக்க திட்டமிட்டுள்ளார் எனவும் கூறினார். அதில் ஒரு வகை திட்டம்தான் நான் முதல்வன் திட்டம்.

 

 

 

author avatar
Parthipan K