உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! தந்தைக்கு பிறகு அந்த வேலை தத்துப்பிள்ளைகளுக்கு வழங்கப்படும்?

0
84
The announcement issued by the High Court! After the father that job will be given to stepchildren?
The announcement issued by the High Court! After the father that job will be given to stepchildren?

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! தந்தைக்கு பிறகு அந்த வேலை தத்துப்பிள்ளைகளுக்கு வழங்கப்படும்?

கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார் அந்த மனுவில் எனது தந்தை என்னை கடந்த 2011 ஆம் ஆண்டு  தத்துப்பிள்ளையாக எடுத்து  வளர்து வந்தார். அவர் கர்நாடகா மாநிலம் பனாஹத்தியில் உள்ள ஜேஎம்எப்சியில் உள்ள உதவி அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் நான்காம் நிலை ஊழியராக பணியாற்றி வந்தார்.

அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இறந்து விட்டார்.அதனால் என் தந்தையின் வேலையை கருணையின் அடிப்படையில் எனக்கு தர வேண்டும் கூறப்பட்டிருந்தது.அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த கர்நாடகா உயர் நீதிமன்றம் டிவிசன் பெஞ்ச் ஒரு மகன் அல்லது மக்கள் அவர்கள் சொந்தப் பிள்ளையாக இருந்தாலும் இல்லையெனில் அவர்கள் தத்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளைகள் தான் அந்த உரிமை எப்போதும் மாறாது.

மேலும் சொந்த பிள்ளை. தத்தெடுக்கப்பட்ட பிள்ளை என்று வேறுபாடு காட்டினால் ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கான அர்த்தமே இல்லை என கூறினார்.இது அரசியலமைப்பு பிரிவு 14 ஐ மீறும் செயலாக இருக்கும் என்பதால் செயற்கையாக பாரபட்சம் காட்டும் விதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.மேலும் தந்தையின் வேலையினை தத்துப்பிள்ளைகளுக்கு வழங்க விதிகளில் இடம் இல்லை என அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

author avatar
Parthipan K