சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு! எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!

0
114
The announcement issued by the Department of Health! The risk of spreading rat fever!
The announcement issued by the Department of Health! The risk of spreading rat fever!

சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு! எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள பணிக்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர்  வனிதா.இவர் ஐந்து மாத கரிப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் காய்ச்சல் ஓரளவு குறைந்த காரணத்தால் வனிதா வீடு திரும்பினார்.அதனையடுத்து தீபாவளி பண்டிகையன்று அன்னூர் சென்றிருந்தார்.அங்கு அவருக்கு மேலும் உடல்நிலை மோசமடைந்தது.அதனால் கடந்த 31ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்த வனிதாவிற்கு ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததோடு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளும் அதிகரித்தது.மேலும் வனித்தாவிற்கு எந்த வகையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என கண்டறிவதற்கு பரிசோதனை செய்யப்பட்டது.அதனையடுத்து அவருக்கு லெப்டோஸ்பைரோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

அதனையடுத்து வனிதா சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் வனிதா மரணம் குறித்து சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சுகாதார துறை அதிகாரிகள் பணிக்கம்பட்டி மற்றும் அன்னூர் ஆகிய இடங்களில் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் எலி காய்ச்சலுக்கு ஐந்து மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K