பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு முதல் முறையாக இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! யார் யார் பங்கேற்பார்கள்?

0
121

அதிமுகவில் உண்டான ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் என்று இரு தரப்பாக அதிமுக பிளவுபட்டுள்ளது இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியும் இந்த பொதுக்குழுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆகவே பன்னீர்செல்வம் அணி எடப்பாடி பழனிச்சாமி அணி என்று அதிமுக இரண்டாக செயல்பட்டு வருவதால் கட்சியின் அடிப்படை தொண்டர்கள் கடும் வேதனையில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் அதிமுக யாருக்கு என்ற போட்டியின் காரணமாக நீதிமன்றத்தில் இரு தரப்பும் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் தீர்ப்பானது இருதரப்புக்கும் சாதகமாக மாறி, மாறி வந்து கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையெல்லாம் அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொள்ளவுள்ளார்கள்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக செயல்பாடுகள் குறித்தும், அதிமுகவின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது. அதோடு எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கும் நிர்வாகிகள் ஒவ்வொருவராக எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாறி வருவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதோடு ஆட்சி அதிகாரத்தையிழந்து எதிர்க்கட்சியாக இருக்கின்ற நிலையில் திமுகவை எதிர்ப்பதற்கு பதிலாக உட்கட்சி மோதல் மிகப்பெரிய தாக்கத்தை அதிமுகவில் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பதால் தென் மாவட்டத்தைச் சார்ந்த நிர்வாகிகள் அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுக் கொள்வார்களா என்று சந்தேகம் இழந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.