வரும் 10ம் தேதி அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்! இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு!

0
89

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது இந்த சூழ்நிலையில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வரும் பத்தாம் தேதி மாலை 4.30 மணியளவில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இடைக்கால ம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மிக விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்துடரில் எப்படி நடந்து கொள்வது என்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

அதிமுக உட்கட்சி மாதம் வலுவடைந்த பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சட்டப்பேரவை கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு ஆர்பி உதயகுமாரையும், துணை கொரடா பதவியிலிருந்து மனோஜ் பாண்டியனை நீக்கிவிட்டு, அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமனம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சபாநாயகர் முடிவெடுக்காமல் இருந்து வருகிறார் இது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதோடு, அதிமுகவின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழாவை வரும் 17ஆம் தேதி கொண்டாடுவது குறித்தும், வழக்கு விசாரணைக்கு பின்னர் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்திருக்கின்றன.