அதிமுகவை அசைத்துப் பார்த்த டிடிவி தினகரன்!

0
83

தேர்தலுக்கு முன்புவரை அதிமுகவை கைப்பற்றிய தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தவர் சசிகலா, ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தந்திரமான முயற்சியின் காரணமாக அவர் தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இருந்தாலும் நிச்சயமாக அதிமுகவை கைப்பற்றுவேன் என்று தெரிவித்துக் கொண்டு தனியாக கட்சியை நடத்தி வருகின்றார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன்.

நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி 2.45 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்று இருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியாக இருந்து வரும் தேமுதிக 0.45 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து மூன்று சதவீத ஓட்டுகளை கூட வாங்கவில்லை அதேசமயம் 19 சட்டசபைத் தொகுதிகளில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு சாதகமாக இந்த கட்சிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த தொகுதிகளின் பட்டியல் வருமாறு, நெய்வேலி சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளர் 977 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சுமார் 2230 வாக்குகளை பெற்று இருக்கிறது. அதேபோல காட்பாடி சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 248 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அங்கே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சுமார் ஆயிரத்து 40 வாக்குகளை பெற்று இருக்கிறது.

விருதாச்சலம் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 862 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த தொகுதியில் தேமுதிக சுமார் 26 ஆயிரத்து 908 வாக்குகளை பெற்று இருக்கிறது. அதேபோல காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 21 ஆயிரத்து 589 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் அங்கே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 44 ஆயிரத்து 864 வாக்குகளை பெற்றிருக்கிறது.

நாங்குநேரி சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 15 ஆயிரத்து 363 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அந்த தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 30 ஆயிரத்து 596 வாக்குகளை பெற்று இருக்கிறது. இராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் 3289 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அங்கே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 1623 வாக்குகள் பெற்று இருக்கிறது.

அதேபோல மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 2747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். 582 வாக்குகள் பெற்று இருக்கிறது சட்டசபைத் தொகுதிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் 919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 1426 வாக்குகளை பெற்று இருக்கிறது.

கந்தர்வகோட்டை சட்டசபைத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் 12721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அந்த தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 12840 வாக்குகளை பெற்றிருந்தது பாபநாசம் சட்டசபை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் 16573 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அங்கே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 19 ஆயிரத்து 778 வாக்குகளை பெற்றிருக்கிறது.

மன்னார்குடி சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளர் 37 ஆயிரத்து 393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 40 ஆயிரத்து 481 வாக்குகளை பெற்று இருக்கிறது. அதேபோல ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் 8538 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 16796 வாக்குகளை பெற்றிருக்கிறது. உத்திரமேரூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் 1622 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் அதேபோல அங்கே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 7211 வாக்குகள் பெற்று இருக்கிறது.

அதேபோல திருவாடானை சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 13 ஆயிரத்து 316 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அந்த தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 32 ஆயிரத்து 74 வாக்குகளை பெற்றிருக்கிறது. வாசுதேவநல்லூர் சட்டசபைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் 2367 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அங்கே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 13,377 வாக்குகள் பெற்று இருக்கிறது. சாத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் 15279 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அந்த தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 32916 வாக்குகளை பெற்றிருக்கிறது.

சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் 354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அங்கே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் 22626 வாக்குகளை பெற்றிருக்கிறார். திருப்போரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் 1947 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 1662 வாக்குகளை பெற்றிருக்கிறது .தியாகராயநகரில் திமுக வேட்பாளர் 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அங்கே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 782 வாக்குகளை பெற்றிருக்கிறது.