குரங்க அம்மையை விரட்ட மக்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!.செத்து மடியும்  அப்பாவி உயிர்கள்?

0
135
The action taken by the people to drive away the monkeypox! Innocent lives dying?
The action taken by the people to drive away the monkeypox! Innocent lives dying?

குரங்க அம்மையை விரட்ட மக்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!.செத்து மடியும்  அப்பாவி உயிர்கள்?

கொரோனா அச்சுறுத்தல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டி வந்தது. அதனை கட்டுபடுத்த பல தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர்.இப்போது சாதுவாக குறைத்து கட்டுக்குள் வந்திருக்கிறது.இதனைதொடர்ந்து இப்போது புதிய வகை நோய் உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.

இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார நெருக்கடியை அறிவித்துள்ளது. இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது ஆகும்.அதாவது ஒருவரிடமிருந்து மற்றொருவற்கு பரவுவது ஆகும்.

இந்நிலையில் பிரேசிலில் குரங்கு அம்மை நோய் பீதியால் குரங்குகள் அதிக அளவு இந்நோய்க்கு பாதிக்கப்பட்டு வருகின்றன. குரங்குகளிடமிருந்து நோய் பரவுகிறது என்கிற தவறான எண்ணத்தில் பிரேசில் மக்கள்அனைவரும் ஒன்று திரண்டு அப்பாவி   குரங்குகளை கொலை செய்து வருகின்றனர்.

அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ரியோ டீ ஜெனிரோவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதே போன்ற சம்பவங்கள் நாட்டின் பிற நகரங்களிலும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே குரங்கு அம்மை நோய் பீதியால் குரங்குகள் கொல்லப்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பு மிகுந்த கவலை தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் இதுப்பற்றி கூறியிருப்பதவது,இப்போது நாம் பார்க்கும் நோய் பரவல் மனிதர்களிடையே உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எனவே மக்கள் நிச்சயமாக விலங்குகளைத் தாக்கக்கூடாது என கூறிஇருந்தார்.இதனால் பிரேசிலில் இதுவரை 1,700 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதும் அங்கு இந்த நோய்க்கு ஒருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

author avatar
Parthipan K