முதல்வரின் செயலால் நெகிழ்ந்து போன அமைச்சர் செய்த செயல்!

0
80

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பூஞ்சேரி வசித்து வரும்  இருளர் இன மக்களுக்கு நேற்றைய தினம் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருக்கின்றார். அதனை அடுத்து  பழங்குடி குடியிருப்பில் வசிக்கும் அஸ்வினி இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள ஒருவரையும் விடாது சுயமரியாதை, சமூகநீதி, காத்த திராவிட இயக்கத்தின் தலையாய பணி சகோதரி அஸ்வினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு கிடையாது, மரியாதை அதனை மீட்டுத் தருவதற்காக ஆட்சிப் பொறுப்பு என்பது ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

அதேபோல இரண்டு வார காலத்திற்கு தமிழ்நாடு முழுவதுமே இந்த மக்களுக்கான நலத் திட்ட உதவிகள் செய்யப்படுவதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்து உள்ளேன் இவற்றை எல்லாம் செய்யும் போது திராவிட இயக்கம் தாண்டி வந்த நெருப்பாறு என் நினைவுகளில் வந்து செல்கிறது அண்ணா பெரியார் கலைஞர் உரை நெஞ்சில் நிறுத்தி அவர்களுக்கான உதவிகளை நான் செய்தேன். நடமாடும் கோவில் திருப்பணி தொடரும் என குறிப்பிட்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முதலமைச்சரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு கூறி வருகிறார்கள், இந்த நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை பாராட்டி மூலமாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது வாசல்கள் தோறும் ஒளியேற்றும் மன்னாரில் பழங்குடியினர் மக்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றிய முதலமைச்சர் நீங்கள்.

விளிம்புநிலை மக்களின் உயிருக்கு கரும்பு புதிய தலைவர் நீங்கள் அவர்கள் இருவர் அல்ல ஆனால் குறிஞ்சி நில மக்கள் என்று கொண்டாடிய குறிஞ்சிமலர் நீங்கள்.

மறுக்கப்பட்டது உணவு அல்ல நூற்றாண்டின் நீதி அதை வழங்க வந்த சமநீதி குலசாமி நீங்கள், வீடு நாடு கூட்டுப் பறவைகளாய் இருந்தவரை கைப்பற்ற பிள்ளையாய் தழுவி வசிப்பிடம் வாழ்வுரிமையும் வழங்கிய அன்பின் அருட்செல்வர் தாங்களே.

உலகம் காணாத கண்ணும் ஒவ்வொரு செயலும் நல்லறம் உம்மோடு இருப்பதே என் வரம் உங்களை வணங்கவே என் கரம் என்று பாராட்டி இருக்கின்றார் அமைச்சர் சேகர் பாபு.