எங்களுக்கு அதுதான் வேண்டும்! அடம்பிடிக்கும் பாஜக செம கடுப்பில் அதிமுக!

0
59

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள், என்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது .

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 5ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் எனவும், பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி அன்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும் என்றும், பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும், தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், எல்லா கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த விதத்தில், அதிமுக கூட்டணியில் இருக்கின்ற பாஜக ஈரோடு மாவட்டத்தில் 12 பேரூராட்சிகளை கேட்டு கார் காட்டுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது அதிமுகவினர் கொங்கு மண்டலத்தில் வலுவான நிலையில் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், பாஜக 12 பேரூராட்சிகளை கேட்டு அடம்பிடிப்பதன் காரணமாக, ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.