நடைமுறைக்கு வந்த தேர்தல் விதிமுறை! முதல் வேலையாக அரசியல் கட்சிகளுக்கு கடிவாளமிட்ட தேர்தல் ஆணையம்!

0
73

பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ஆனால் நேற்றைய தினம் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ,தேர்தல் நடத்தை விதிமுறை நேற்று மாலையில் இருந்து அமலுக்கு வந்திருக்கிறது. இதன் காரணமாக, 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பணமாக கொண்டு செல்ல இயலும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு மேலான தொகை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அதற்குரிய ஆவணங்களை காட்டி விட்டுத்தான் செல்ல வேண்டும். அதிலும் தமிழ்நாட்டில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால், தமிழ்நாட்டில் தான் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தமிழக சட்டசபைத் தேர்தலில் வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்றும் நிர்ணயம் செய்து தெரிவித்திருக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

தலைநகர் புதுடெல்லியில் பத்திரிக்கையாளர்கள் இடையே உரையாற்றிய சுனில் அரோரா தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் ஈடுபடும் எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல புதுவையில் ஒரு தொகுதிக்கு 22 லட்சம் ரூபாயும் தமிழ்நாடு உள்பட மற்ற நான்கு மாநிலங்களிலும் ஒரு தொகுதிக்கு 30.8 லட்சம் ரூபாய் செலவு செய்யலாம் என்று அனுமதி வழங்கி உத்தரவிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.