அடாத மழையிலும் விடாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி! முதல்வரின் நெகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு!

0
78

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவ மழை காலங்களில் தமிழ்நாடு முழுவதும் பாதிப்பு ஏற்ப்பட்டாலும் அது பெரிய அளவில் பேசுபொருளாக மாறாது.

ஆனால் தலைநகர் சென்னை கடந்த காலங்களில் பருவமடைம்போது வெகுவாக பாதிப்புக்கு உள்ளானது. இது ஒட்டுமொத்த தமிழகத்திலும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக இருந்தது.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக இந்த காரணத்தை முன்வைத்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்தாலும் கூட சென்னை இப்படி தண்ணீரில் மிதப்பது மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் சுதாரித்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவர் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு வழங்கிய அழுத்தத்தின் காரணமாக, சென்னை முழுவதும் இருந்த வடிகால் வாய்கள் மற்றும் டிரைனேஜ் உள்ளிட்ட அனைத்தும் வெகுவாக சீரமைக்கப்பட்டது. சில இடங்களில் செயற்கை கால்வாய்கள் அமைத்து நீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனர்.

ஆனாலும் ஒரு சில இடங்களில் இன்னமும் மழைநீர் தேங்கி நிற்கத்தான் செய்கிறது. ஆனாலும் மழை நீர் வடிகால் பணிகள் இன்னமும் முடிவடையவில்லை. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மழை நீர் வடிகால் பணிகள் முடிவடைந்தால் நிச்சயமாக சென்னையில் ஒரு இடத்தில் கூட மழை நீர் தேக்கம் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களை பாதுகாக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள், அரசு மற்றும் உள்ளாட்சி பணியாளர்களே என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை தேங்கினாலும் உடனடியாக வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசி வாழ்த்துகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் இந்த பணிகளில் இடைவிடாமல் ஈடுபடும் பணியாளர்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.

 

அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரையிலிருந்து விமானத்தில் சென்னை வந்த நான், வேளச்சேரி கல்கி நகரில் மழை நீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் நன்றி பதிவு மழையில் பணியாற்றும் ஊழியர்களை நிகழ்ச்சி அடைய வைத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here