திருமணமான பெண்களின் கவனத்திற்கு! தாலிக்கயிற்றை இப்படி தான் அணிய வேண்டும்!

0
79

திருமணமான பெண்களின் கவனத்திற்கு! தாலிக்கயிற்றை இப்படி தான் அணிய வேண்டும்!

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என முன்னோர்கள் கூறுவார்கள். வாழையடி வாழையாகத் தொடர்வது தான் கல்யாண பந்தம் எனவும் கூறுவார்கள். அவர்கள் காலத்தில் இருந்தே கல்யாணத்தில் நிறைய சடங்குகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த சடங்கில் ஒரு வகைதான் மணமகன் மணமகளின் கழுத்தில் மாங்கல்யம் கட்டுவதாகும். அதனை தாலி எனவும் கூறலாம். காலம் காலமாக தாலி என்பது மஞ்சள் கயிற்றில் கட்டுவதாக இருந்து வந்தது. இப்போது நாகரிக உலகத்தில் தங்கத்தில் தாலி கோர்த்து கட்டுகிறார்கள்.

தாலி அணிந்து  இருப்பதிலும் பல வழிமுறைகள் இருக்கிறது. அதன் அடிப்படையில் தாலியனது பெண்கள் அணியும் பொழுது அது அவர்களின் மார்பு குழிக்கு கீழ் இருக்கும்படி  வேண்டும். தாலி கொடியானது மஞ்சள் கயிறு மற்றும் அங்கத்திலும் அவர்களின் விருப்பங்களின் படி கட்டிக்கொள்ளலாம்.

அவ்வாறு அங்கத்தில் கட்டும்பொழுது ஒற்றை இலக்க எண்ணில் கட்டவேண்டும். மாதத்தில் வரும் ஆடி பெருக்கின்  பொழுது தங்களின் பழைய தாலி கயிற்றை அகற்றி விட்டு புதிய தாலி கயிற்றைக் கட்டிக் கொள்ளலாம்.

தங்கத்தால் ஆன தாலியை கட்டி கொண்டு குடும்பம் நடத்தும் பெண்கள் மன நிம்மதி இல்லாமல் இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்ய மாட்டாள் என்பது ஐதீகம். தாலிக்கயிறு மாற்றும் பெண்கள் சுபதினங்கள் பார்த்து அந்த தினத்தின் போது தலை குளித்து பின்பு குலதெய்வத்தை வணங்கி அதன் பிறகே காளையை ஒரு கயிற்றில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பது மரபு.

author avatar
Parthipan K