‘தளபதி 67’ படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணிபுரியப்போகும் மற்றொரு இயக்குனர் ?

0
165

‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் ‘தளபதி 67’ படத்திற்கான கதையை தயார் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இப்படத்திற்கான பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதிரடி கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பல மொழியில் பிரபலமான நடிகர்களும் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, இருப்பினும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடவில்லை. விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் வாரிசு படத்தின் வெளியீட்டிற்கு பிறகு தான் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியுள்ளார்.No chance in 'Thalapathy 67' - Lokesh Kanagaraj tells close friend - Tamil  News - IndiaGlitz.com

‘வாரிசு’ படம் ஜனவரி 12, 2023 வெளியாகவுள்ளது, இதன் வெளியீட்டிற்கு பிறகு தரமான ஒரு ப்ரோமோவுடன் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடிக்கடி ஊடகங்களில் ‘தளபதி 67’ படம் குறித்த செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் லோகேஷுடன் இணைந்து ‘ஜில் ஜங் ஜக்’ பட இயக்குனர் தீரஜ் வைத்தியம் பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது, படத்திற்கு வசனம் எழுதும் பணியில் இவரும் சேர்ந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.Jil Jung Juk' director Deeraj Vaidy joins as co-writer for 'Thalapathy 67'  | Tamil Movie News - Times of India

இதற்கு முன்னர் வெளியான தகவலில், லோகேஷின் நெருங்கிய நண்பரும் ‘மேயாத மான்’ படத்தின் இயக்குனர் ரத்னகுமாரும் ‘தளபதி 67’ படத்தில் இணைந்து பணியாற்றப்போவதாக கூறப்பட்டது. இதுதவிர ‘தளபதி 67’ படத்தில் பிரபல இயக்குனர் கெளதம் வாசுதே மேனன் நடிக்கப்போவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

author avatar
Savitha