தல தளபதியின் அடுத்த படம் ரெடி? ரிலீஸ் தேதி வெளியீடு ரசிகர்கள் உற்சாகம்!

0
261
Thala Thalapathy's next film ready? Release date release fans excited!
Thala Thalapathy's next film ready? Release date release fans excited!

தல தளபதியின் அடுத்த படம் ரெடி? ரிலீஸ் தேதி வெளியீடு ரசிகர்கள் உற்சாகம்!

வாரிசு:

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில்,தில்ராஜி தயாரிப்பில்,விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வாரிசு.விஜய் தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.இவருடைய வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது.மேலும் இந்த படத்தில் சரத்குமார்,யோகிபாபு,ராஷ்மிகா மந்தனா,பிரகாஷ் ராஜ்,ஜெயசுதா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.இந்த படம் அப்பா மகன் இடையே உள்ள பிரச்சனை.மேலும் குடும்பங்களின் முக்கியத்துவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

துணிவு:

போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில்,அஜித்குமார் நடிப்பில் தாயாராகிய படம் துணிவு.தமிழ் சினிமாவில் விஜய்க்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர் அஜித்.இந்த படத்தில் மஞ்சுவாரியார், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம்.சுந்தர்,மகாநதி சங்கர், முத்திரக்கனி, பகவதி பெருமாள் அஜய் மற்றும் வீரா உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர்.இந்த படமும் ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது.

விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் மற்றும் அஜித் நடிப்பில்  துணிவு திரைப்படமும் வெளியானதால் இரு தரப்பு ரசிகர்களும் யார் படம் அதிக வசூல் செய்யும் என காத்துக்கொண்டுள்ளனர்.இந்நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 வது படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.இந்த படம் பிடிப்பு மும்பை மற்றும் சென்னை பகுதியில் நடக்க வாய்புள்ளது என தெரிவித்துள்ளனர்.இந்த படத்தில் ஹீரோயினி யார் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாவில்லை.அதனை தொடர்ந்து லோகாஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள படம் தளபதி 67.

விஜய்யின் 67 வது படத்தின் படபிடிப்பு கடந்த மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகின்றது.அஜித் நடிப்பில் உருவாக்கி வரும் ஏகே 62 படமும்,விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படமும் அடுத்த தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என தகவல் வெளியாயுள்ளது.

author avatar
Parthipan K