இத்தனை தீவிரவாத தாக்குதல்கள் நடந்தும் இந்தியா விழித்து கொள்ளவில்லையா? சரியான பதிலடியை எதிர்பார்க்கும் மக்கள்

0
553

இத்தனை தீவிரவாத தாக்குதல்கள் நடந்தும் இந்தியா விழித்து கொள்ளவில்லையா? சரியான பதிலடியை எதிர்பார்க்கும் மக்கள்

புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலைப்படையை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதி நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பல்வேறு இனம்,மொழி மற்றும் கலாச்சார அடையாளத்துடன் வாழும் இந்திய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடைபெற்ற இந்த தீவிரவாத தாக்குதலை உலக மக்கள் அனைவரும் கண்டித்து வருகின்றனர்

இதுவரை நடந்த தீவிரவாத தாக்குதல்களிலே இது அதிக இழப்பை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் தீவிரவாத குழுக்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்குதல்களை நடத்தி வரும் வேளையில் இந்திய அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லையா என்றும் மக்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இதுவரை பாதுகாப்பு படைவீரர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஏராளம் அதில் கடந்த காலங்களில் நடைபெற்ற குறிப்பிட்ட சில சம்பவங்கள்

1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ம் தேதி ஸ்ரீநகரில் ராணுவ தலைமையகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தியதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர்.

2002 ஆம் ஆண்டு மே 14ம் தேதி குலாசாக் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 36 வீரர்கள் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.

2003 ஆம் ஆண்டு ஜுலை 22 ம் தேதி ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

2006 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி ஸ்ரீநகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 காவலர்கள், 2 CRPF வீரர்கள் உயிரிழந்தனர்.

2013 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ஸ்ரீநகரில் CRPF முகாமில் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
2015ஆம் ஆண்டு மார்ச் 25 ம் தேதி கத்துவா காவல்நிலைய தாக்குதலில் 3 பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழந்தனர்.

2016 ஆம் ஆண்டு ஜனவரி 2 ம் தேதி பஞ்சாப் பதன்கோட் விமானபடை தள தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தெற்கு காஸ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

இவ்வாறு தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களை நடத்திவரும் தீவிரவாத குழுக்களை அழிக்க இனியாவது உறுதியான நடவடிக்கை எடுக்குமா என்று மக்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

author avatar
Parthipan K