கேரளாவில் நடந்த பயங்கரம்! 11 முறை கொடூரமாக குத்தி கட்சி நிர்வாகி படுகொலை!

0
68
Terror in Kerala! Party executive assassinated 11 times brutally stabbed!
Terror in Kerala! Party executive assassinated 11 times brutally stabbed!

கேரளாவில் நடந்த பயங்கரம்! 11 முறை கொடூரமாக குத்தி கட்சி நிர்வாகி படுகொலை!

கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் திருவள்ளூர் தாலுகா பிரிங்கரா பகுதியை சேர்ந்தவர் சந்தீப்குமார் என்பவர். 34 வயதான இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் அதே பகுதியில் கமிட்டி செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் திருவிள்ளாவில் உள்ள சேத்தன் ஹரி பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் சந்தீப் குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து சில நபர்கள் சென்றனர். மேலும் அவர்கள் சாலையில் யாரும் இல்லாத இடமாகப் பார்த்து சந்தீப் குமாரை இடைமறித்தனர். அதன் பிறகு தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை தொடர்ந்து 11 முறை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அவர் அலறிய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து அங்கு வந்தனர். ஆனால் அங்கிருந்த உள்ளூர் வாசிகள் வருவதற்கு முன்னரே தாக்குதல் நடத்திய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இந்த கொடூர தாக்குதலின் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிர் உயிரிழந்துவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தீப் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து உள்ளூர் வாசிகள் சிலர் தெரிவிக்கையில் 5 பேர் கொண்ட இளைஞர்கள் குழு அவரை தாக்கியதாகவும், நாங்கள் வருவதற்குள் அவர்கள் ஓடி விட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்துள்ளனர். போலீசார் இந்த கொலை வழக்கில்  கனியம்பரம்பில் ஜிஷூனு மற்றும் ஸ்ரீஜித் என்ற இரண்டு பேருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்து உள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தொடர்ந்து இறங்கியுள்ளனர். அந்த நபர்கள் இருவருமே ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நிர்வாகியாக இருக்கும் அவரை ஆர்எஸ்எஸ் அமைப்பினரே கொலை செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு கடுமையான மறுப்பு தெரிவித்துள்ளது.