பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உஷார்! அரசின் எச்சிரிக்கை!

0
86
Tenth and Twelfth Grade Students Usar! Government warning!
Tenth and Twelfth Grade Students Usar! Government warning!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உஷார் ! அரசின் எச்சிரிக்கை!

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் முடிவடைந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.பத்து மற்றும் பனிரெண்டாம்  வகுப்பு மாணவர்கள் அனைவரும்  சிறப்பாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர்.மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கல்வித் துறை அமைச்சர் பள்ளி நிர்வாகம் போன்ற பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் பெற்றவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85% மதிப்பெண் பெற்றவர்களுக்கு 25000 ரூபாயும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது என்று வாட்ஸப்பில் தகவல் பரவி வருகிறது.எனவே இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும்  அரசு அதிகாரிகள் எச்சரிக்கை கூறியுள்ளனர். மேலும் இதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்றும், மாணவர்கள் ஸ்காலர்ஷிப் தொடர்பான விவரங்களை மத்திய அரசின் https://www.education.gov.in/en/schemes-school என்ற இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K