பத்து வருடங்கள் கழித்து காங்கிரசுக்கு  கிடைத்த வெற்றி!

0
58
Ten years later the victory for Congress!
Ten years later the victory for Congress!

பத்து வருடங்கள் கழித்து காங்கிரசுக்கு  கிடைத்த வெற்றி!

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற லோக்சபா தேர்தலில் காங்கரசுக்கு ஆதரவாக சிவகங்கையில் மத்திய அமைச்சர் சிதம்பரம் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து  அ.தி.மு.க சார்பில் ராஜ்கண்ணன் போட்டியிட்டார்.இந்த லோக்சபா தேர்தலில் 3,334 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக போட்டியிட்ட சிதம்பரம் வெற்றிபெற்றார்.

இதனையடுத்து சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு பதிவு செய்தார். பத்து ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கை இறுதியில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் விசாரித்தார்.அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் 2020 அக்டோபரில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிக்காமல் தள்ளி வைத்தார்.இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கூறியதாவது,2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற லோக்சபா தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என உத்தரவிட்டார்.இந்த வழக்கு சம்மதமான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என ராஜகண்ணப்பன் மனுவை தள்ளுபடி செய்தார்.