“மைதானம் இப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை…” தென் ஆப்பிரிக்க கேப்டன் கருத்து

0
67

“மைதானம் இப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை…” தென் ஆப்பிரிக்க கேப்டன் கருத்து

தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு முதல் டி 20 போட்டியை மிக மோசமாக தோற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் இரண்டு 3 ஓவர்களில் 10 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது. இதில் ஒரே ஓவரில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அதன் பிறகு மெல்ல நிதானமாக விக்கெட்களை இழக்காமல் ஆடிய தென் ஆப்பிரிக்கா, ஆட்ட முடிவில் 108 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்களை இழந்திருந்தது. இதன் பிறகு இந்தியா அணி இலக்கை எளிதாக துரத்தி வெற்றி பெற்றது.

தோல்விக்குப் பின்னர் பேசிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா “ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் சரியாக விளையாடவில்லை. ஆடுகளம் இப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆம், இது கடினமானதாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். வேகப்பந்து வீச்சாளர்கள் இலக்கைக் காக்க இன்னும் கொஞ்சம் ரன்கள் தேவைப்பட்டது. அவர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்ய ஸ்பின்னர்களும் அவர்களை ஆதரித்தனர். எங்கள் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்பது ஒரு பாஸிட்டுவ்வான அம்சம்” எனக் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம் மைதானம் பேட்டிங்குக்கு ஏற்ற மைதானம் இல்லை. அங்கு இதுவரை நடந்த டி 20 போட்டிகளில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோரே 137 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.