6 மணிநேர ஃபேஸ்புக் முடக்கம்.!! கோடிக்கணக்கான பயனர்களை பெற்ற டெலிகிராம்.!!

0
131

பேஸ்புக் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டகிரம் செயலிகள் ஆறு மணி நேரம் முடங்கியதால் டெலிகிராம் செயலிக்கு ஒரே இரவில் 7 கோடி பயனாளர்கள் கிடைத்துள்ளதாக டெலிகிராம் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் செய்திகளை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் கடந்த, அக்டோபர் 4ம் தேதி அன்று இரவு 9 மணி முதல் காலை 4 மணி வரை செயல்படவில்லை. அதன் காரணமாக நெருக்கமானவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளின் சேவை சுமார் ஆறு மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குசந்தைகளில் பேஸ்புக் பங்குகள் மதிப்பு சரிந்ததால் மார்க் ஜுக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 50 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. இதனால், உலக பணக்காரர்கள் வரிசையில் அவர் மூன்றாவது இடத்தில் இருந்து, 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், பேஸ்புக்கின் விளம்பர வருவாயில் மட்டும் ஒரு மணி நேரத்திற்கு 7 கோடி ரூபாய் வீதம் ஆறு மணி நேரத்திற்கு 42 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 6 மணிநேரம் முடங்கியதால் டெலிகிராம் செயலி க்கு ஒரே இரவில் 7 கோடி பயனாளர்கள் கிடைத்துள்ளதாக டெலிகிராம் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், எங்களது குழுவின் உழைப்பை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. சுமார் 7 கோடி புதிய பயனர்களை பெற்றுள்ளோம். அதிக பயனர்களை ஒரே நேரத்தில் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்ததால் செயலியின் செயல்பாட்டில் வேகம் குறைந்து காணப்பட்டது என்று கூறினார்.