கொரோனா பரிசோதனை பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
105
Teachers will be involved in corona testing! Action order issued by the government!
Teachers will be involved in corona testing! Action order issued by the government!

கொரோனா பரிசோதனை பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற இடங்களில் கொரோனா பரவல் மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது. அதனால் அனைத்து விமான நிலையங்களிலும் கட்டுப்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.அதில் நேற்று மாலை மதுரை விமான நிலையத்தில் இரண்டு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் கூறுகையில் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு  மக்கள் சமூக இடைவெளி,முககவசம், கிருமி நாசினி போன்றவைகளை பின்பற்ற வேண்டும்.

இன்று பிற்பகல் திருச்சி விமான நிலையத்தை ஆய்வு செய்ய உள்ளார்.மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில்,அரசு பள்ளி ஆசிரியர்களை டெல்லி விமான நிலையத்தில் கொரோனா பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டது.

டிசம்பர் 31 முதல் ஜனவரி 15 ஆம் வரை மொத்தம் 85 ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர் ஊழியர்கள் டெல்லி விமான நிலையத்தில் ஒவ்வொரு நேரத்தில் பணியில் அமர்த்தப்பட்டுவார்கள் என கூறப்பட்டது. இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு வர தொடங்கி உள்ளது.அதனை தொடர்ந்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. வேண்டுமென்றில் சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் விமான நிலையத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K