தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
100

ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி மணிகண்டம் ஒன்றியம் சோமரசம் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடத்தை நேற்றைய தினம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதன் பின்னர் பள்ளியில் ஆய்வுகளையும் செய்தார்.

இதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. வழக்கமாக மே மற்றும் ஜூன் போன்ற மாதங்களில் நடைபெறும் ஆசிரியர்களின் பணி மாறுதல் கலந்தாய்வை இந்த வருடம் நடத்த முடியவில்லை. நோய்த்தொற்று காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற சூழலில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து நிர்வாக பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், முதலமைச்சரின் ஆலோசனை பெற்ற பின்னர் மிகவும் விரைவாக ஆசிரியர்களின் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு அதன் பின்னர் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அப்படி இருந்தால் அது சரி செய்யப்படும் என்றும் கல்வி சேனல்களை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்திருக்கின்றார்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு படுத்து இருக்கின்ற சூழலில் ,கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் அக்டோபர் மாதத்தில் தேர்வை எழுதிக் கொள்ளலாம். நோய்த் தொற்று பரவல் காட்டுக்குள் வந்தால் மட்டுமே அப்போதைய சூழ்நிலையை கருத்தில் வைத்தே இந்த தேர்வும் நடத்தப்படும். சிறப்பு தேர்வு எழுத விருப்பம் கொண்ட மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் நாளைய தினம் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

பள்ளிகளில் இடைநிற்றல் தொடர்பாக கணக்கெடுப்பு செய்து வருகின்றோம். திமுக அளித்த ஏழு முக்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது தான் அந்த வாக்குறுதி. ஆகவே தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாணவர்கள் இடைநிற்றலை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.