ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 நடைபெறும் மாதம் வெளியீடு! தேர்வு வாரிய அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு!

0
54
Teacher Eligibility Test Paper 2 will be released in the month! The announcement made by the examination board officials!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாள் 1,தாள் 2 என இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும்.மேலும் தாள் 1 ல் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இடைநிலை ஆசிரியராகவும் ,தாள் 2ல் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பட்டதாரி ஆசிரியராகவும் தகுதி வழங்கப்படும்.

அதனையடுத்து நடப்பாண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் தாள் 1க்கு 2 லட்சத்து 30ஆயிரத்து 878 பேர் விண்ணப்பித்துள்ளனர்.தாள் 2 தேர்விற்கு 4லட்சத்து  ஆயிரத்து 886 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.முதல் தாள் தேர்வானது கணினி மூலம் கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

அதனையடுத்து இரண்டாம் தாள் தேர்வு எப்பொழுது என தேர்வர்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.அதனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் ஆசிரியர் தகுதி தாள் 2 தேர்வு அடுத்த மாதம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது எனவும் அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K