தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
64

தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற நிறுவனங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழகம் முழுவதும் டீ கடைகள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் தேநீர் கடைகள் பார்சலுக்கு மட்டும் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அத்தியாவசிக்கடைகள் அனைத்தும் இயங்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக இந்த அறிவிப்பை பயன்படுத்தி கடைகளை திறக்கும்போது சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கிருமி நாசினிகளை கொண்டு கடை முழுவதும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அதுபோன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் திங்கள் கிழமை முதல் இயங்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.