பெட்ரோல் விலை உயர்வு! முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
68

உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் தான் இருந்து வருகின்றது பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன.

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாயை கடந்து விட்டது. அதேபோல டீசல் விலையும் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஒரு சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை நெருங்கிக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், மேகாலயாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 92 ரூபாய் 90 காசுக்கும், ஒரு லிட்டர் டீசல் 86 ரூபாய் 23 காசுக்கும் விற்பனையாகின்றது. இது போன்ற தொடர்ச்சியான விலை உயர்வுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் பெட்ரோல் டீசல் விலை மீதான மதிப்பு கூட்டு வரியை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் குறைப்பதாக மாநில அரசு சென்ற வாரம் அறிவித்தது.

ஆனாலும் எண்ணெய் நிறுவனங்கள் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை தொடர்ச்சியாக உயர்த்திக் கொண்டே வந்தன. அவனை கண்டிக்கும் விதமாக மேகாலயாவில் வணிகப் போக்குவரத்து வாகனங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்படி பெட்ரோல் டீசல் மீது இருக்கும் மதிப்பு கூட்டு வரியை குறைப்பதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்து இருக்கின்றது.

மேகாலய மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக ஒட்டுமொத்தமாக பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் வரை அந்த மாநில அரசு குறிப்பிடுகின்றது.